நாகப்பாவை மீட்க ரஜினி காட்டுக்கு போகலாமே: ராமதாஸ் யோசனை
டெல்லி:
நாகப்பாவை மீட்க ரஜினிகாந்தை காட்டுக்குள் அனுப்பலாம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
டெல்லியில் நேற்று துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்துப் பேசிய அவர் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க கன்னடம், தமிழ் ஆகிய இரு மொழிகள் தெரிந்த ஒருவரை அனுப்பலாமா? என்றுபத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ராமதாஸ், இது மிக நல்ல யோசனை, இரு மொழி தெரிந்த ஒரு நடிகரை வீரப்பனிடம் அனுப்பலாம். அதுரஜினிகாந்தாகக் கூட இருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
ராஜ்குமார் கடத்தப்பட்டபோது இரு மாநில அரசுகளும் எவ்வளவு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தனவோ அதே மாதிரியானநடவடிக்கைகளை இப்போதும் எடுக்க வேண்டும். நாகப்பாவை வீரப்பனிடம் இருந்து மீட்டாக வேண்டும்.
ராஜ்குமார் அளவுக்கு இவர் முக்கியஸ்தர் இல்லை என்பதற்காக இரு மாநில அரசுகளும் மெத்தனாக இருக்கக் கூடாது. நாகப்பாவை மீட்டாகவேண்டும் என்றார் ராமதாஸ்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது காட்டுக்குப் போய் வீரப்பனைச் சந்திக்கத் தயார் என்று ரஜினி கூறியது நினைவுகூறத்தக்கது.மேலும் பலமுறை பெங்களூர் வந்த ரஜினி, கர்நாடக முதல்வர் மற்றும் ராஜ்குமார் குடும்பத்தினரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.வீரப்பன் பெரும் அளவில் பணம் கேட்டபோது அதைத் தருவதற்காக கர்நாடக சினிமா பிரபலங்களுடனும் பேச்சு நடத்தினார் ரஜினி என்பதுகுறிப்பிடத்தக்கது.
அப்போது வீரப்பனுக்குச் சென்ற பெரும் பணம் சினிமா வட்டாரத்தில் இருந்து சென்றது என்பதும் நினைவுகூறத்தக்கது.
பணம் கொடுக்க கெளடா யோசனை:
ராஜ்குமாரை மீட்பதற்காக கோடிக்கணக்கில் பணத்தை வீரப்பனுக்குத் தந்தார்கள். அதே போல இப்போதும் பணம் தந்து நாகப்பாவை மீட்கவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவே கெளடா கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications