ரஜினியும் ராமதாசும் இணைந்து சென்று வீரப்பனை சந்திக்க வேண்டும்: திருமாவளவன்
சென்னை:
வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று வீர வசனம் பேசிய ரஜினிகாந்தும், வீரப்பனைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ராமதாசும் இணைந்துகாட்டுக்குச் சென்று நாகப்பாவை மீட்டு வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொது மக்களின் உயிரையும் அரசின் பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் வீரப்பனின் கோரிக்கைகளை ஏற்று அவனுடன் சமரசம்செய்து கொள்வது தான் நல்லது.
நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியபோது வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று வீர வசனம் பேசிய ரஜினிகாந்த் இப்போதும் அதேபோல பேச வேண்டும். ஒரு நடிகருக்காக குரல் கொடுத்த அவர் இப்போது கடத்தப்பட்டது அரசியல்வாதிதானே என்று அலட்சியமாகஇருக்காமல் வாயைத் திறக்க வேண்டும்.
ராஜ்குமாரை மீட்க உதவிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனையும் கைது செய்து சிறையில் போட்டாகிவிட்டது. இனியாரை வைத்து நாகப்பாவை மீட்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தொடர்ந்து வீரப்பனை ஆதரித்து வருகிறார். என்னைக் கேட்டால், பேசாமல் ரஜினியையும்,ராமதாசையும் காட்டுக்கு அனுப்பி வீரப்பனுடன் பேசி நாகப்பாவை மீட்டு வரச் செய்யலாம்.
இவ்வாறு தனது அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications