அரசு கல்லூரி ஆசிரியர்கள் நூதன போராட்டம்
சென்னை:
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநிலக் கல்லூரிஆசிரியர்கள் இன்று தங்கள் கண்களில் கறுப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன்இணைக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்க ஆதரவாக அரசுக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் கண்களில்கறுப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
கண்களில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறே அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
கூட்டுப் போராட்டம்:
இதற்கிடையே அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல்தொடர்ந்து நிராகரித்து வரும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து வரும் செப்டம்பர் 3ம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின்தலைவர் ஸ்ரீதரன் கூறினார்.
இந்தப் போராட்டங்களில் லட்சக்கணக்கான ஆசிரியர்களும் ஊழியர்களும் கலந்து கொள்வார்கள் என்றும்அதற்கும் அரசு செவி சாய்க்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும்ஸ்ரீதரன் தெரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications