ஜெயலலிதா கொடும்பாவி காங்கிரஸ் எரிப்பு
சென்னை:
காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் அவர் இந்தியப் பிரதமராக வருவதைஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்சென்னையில் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தனர்.
ஜெயலலிதா இவ்வாறு கூறியுள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்ரமேஷ் சென்னிதாலா இன்று சென்னையில் கூறினார்.
காங்கிரசுடன் தமாகா இணைந்த பிறகு தமிழக காங்கிரசின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை முதல்முறையாக சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் சென்னிதாலா கூறுகையில்,
காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவில் 14 மாநிலங்களில் எங்கள் கட்சி ஆட்சியைக்கைப்பற்றியுள்ளது.
அந்த அளவுக்கு மக்களிடம் அமோக செல்வாக்கைப் பெற்றுள்ளவர் சோனியா. அவருடைய தலைமையின் மீதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாகவே இத்தனை மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கமுடிந்துள்ளது.
இந்த நிலையில் சோனியா ஒரு வெளிநாட்டவர் என்பதால் அவர் பிரதமராக வருவதை ஏற்றுக் கொள்ள முடியாதுஎன்று ஜெயலலிதா கூறியுள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது.
நேற்றைய காவிரி ஆணையக் கூட்டத்திலிருந்து ஜெயலலிதா திடீரென்று வெளிநடப்பு செய்ததும் மிகவும் தவறானசெயலாகும். காவிரிப் பிரச்சனையைத் தீர்க்கும் விஷயத்தில் அவருக்குத் தான் அதிகமான பொறுப்புக்கள் உள்ளன.அவரே வெளிநடப்பு செய்தால் எப்படி?
இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு காவிரிப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்என்றார் சென்னிதாலா.
ஜெ. உருவ பொம்மை எரிப்பு:
இதற்கிடையே ஜெயலலிதாவின் பேச்சால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் இன்று சென்னையில்ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தனர்.
யாருடன் கூட்டணி?
இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது தமிழகத்தில் திமுகவையும் அதிமுகவையும் காங்கிரஸ் சமதூரத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறினார்.
காங்கிரஸ் தனித்தே செயல்பட விரும்புவதாகக் கூறிய சென்னிதாலா, இருந்தாலும் தேர்தலின் போது தான்கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதையும் காங்கிரஸ் தலைமை தான் அதை முடிவு செய்யும் என்றும்கூறினார்.
மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவதைத் தான் சோனியா விரும்புவதாகவும் அதற்கான அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் சென்னிதாலா தெரிவித்தார்.
""இன்னுமா இளங்கோவன்...?""
இந்த காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் இன்னும்அப்பதவியில் நீடிக்க வேண்டுமா என்று கேட்டார் முன்னாள் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி.
இதற்குப் பதிலளித்த சென்னிதாலா, கட்சி மேலிடம் இது தொடர்பாக இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை. எனவேஅதுவரை இளங்கோவனே அப்பதவியில் இருப்பார் என்று கூறினார்.
அரசை எதிர்த்து போராட்டம்:
தமிழகத்தில் ஏராளமான மக்கள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகஅரசோ மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
அரசின் மெத்தனப் போக்கு மேலும் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றும்இன்றைய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முன்னாள் தமாகா தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜி.கே. வாசன், முன்னாள்காங்கிரஸ் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, குமரி அனந்தன், எம்.பி. சுப்பிரமணியம் உள்ளிட்ட 30ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சட்டசபையில் தமாகாவினர் எப்பக்கம்?
இதற்கிடையே தமிழக சட்டசபையில் தமாகா எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் பக்கமே சேர்த்து விடலாமா என்பதுகுறித்து ஆய்வு செய்து வருவதாக சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
காங்கிரசுடன் தமாகா இணைந்த பிறகு அனைத்து 18 தமாகா எம்.எல்.ஏக்களையும் காங்கிரஸ்எம்.எல்.ஏக்களாகவே அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி சட்டசபை தமாகா தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் சமீபத்தில் சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
சட்டசபை விதிகளின் படி தற்போது இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் இதுதொடர்பான முடிவை அறிவிக்கப் போவதாகவும் காளிமுத்து இன்று நிருபர்களிடம் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications