காங்கிரஸ் கூட்டத்தில் கருணாநிதி: புதிய கூட்டணி உருவாகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்து அதன்மூலம் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பிடிக்க ஜெயலலிதா முயன்றுவரும் நிலையில் காங்கிரஸ் கட்சி நடத்தும் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக அங்கு சந்தோஷமாக இல்லை. தொடர் மன வருத்தங்களுடன் புழுங்கியவண்ணம் தான் அந்தக் கூட்டணியில் தொடர்ந்து வருகிறது.

இதனால் திமுகவை கழற்றிவிட்டுவிட்டு ஜெயலலிதாவுடன் கைகோர்க்க பா.ஜ.கவில் அத்வானி கோஷ்டி தயாராக உள்ளது.

இந் நிலையில் மறைந்த மூப்பனாரின் ஓராண்டு நினைவு நாள் விழா வரும் செப்டம்பர் 1ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.இதையொட்டி சென்னையிைல் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்க உள்ளார்.

இக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மூப்பனார் குறித்து எழுதிய புத்தகத்தை கருணாநிதிவெளியிடுகிறார். இந்தக் கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான ரமேஷ் சென்னிதலா, சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர்அஜீத் ஜோகி, ஜி.கே. வாசன், இளங்கோவன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

அப்போது திமுக தலைவர் கருணாநித்குக்கு காங்கிரஸ் நேரடியாகவே கூட்டணிக்கு வர அழைப்பு விடுக்கும் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரைய்யா, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.

இதில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், இதுவரை அவரிடம் இருந்து பதில்வரவில்லை என்றும் தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.

ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டதே இலலை. இப்போது தான்முதன்முறையாகப் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸை தான் நெருங்குவதையும் மிக ஜாக்கிரதையாகவே கையாண்டு வருகிறார் கருணாநிதி. இப்போதைக்கு உடனடியாகபா.ஜ.கவுடன் பிரச்சனை செய்ய அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது.

இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, சோனியா குறித்து ஜெயலலிதா கூறிய கருத்துக்கள் குறித்து பதில் கூற மறுத்துவிட்டார்.

நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, 3 வருடத்துக்கு முன் சோனியாவை வெளி நாட்டவர் என்று கூறிய ஜெயலலிதா பின்னர்அவருடன் கூட்டணி அமைத்தார். இப்போது மீண்டும் அந்தப் பிரச்னையை கிளப்பியுள்ளார். ஆனால், நான் இதில் எந்தக்கருத்தும் கூற விரும்பவில்லை.

இப்படிப் பேசுவதால் பா.ஜ.கவை ஜெயலலிதா நெருங்குவதாக நான் கருதவில்லை. அவருடன் கூட்டணி கிடையாது என்றுவெங்கைய்யா நாயுடு தெளிவுபடுத்திவிட்டதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்திய அரசுடன் ஜெயலலிதா நெருங்குவதாகக் கூறுவதையும் நம்பமுடியவில்லை. நீதிமன்ற விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றார்.

தன்னுடைய இந்தப் பேச்சு மூலம் பா.ஜ.கவுடன் உடனடி மோதலை விரும்பவில்லை என்பதை கருணாநிதிதெளிவாக்கியிருக்கிறார்.

காங்கிரசுடனும் உறவைத் தொடங்குவதன் மூலம், தன்னுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு ஜெயலலிதாவுடனும் நெருங்கிகுழப்பம் செய்து வரும் பா.ஜ.வை, அவர்கள் பாணியிலேயே குழப்ப ஆரம்பித்திருக்கிறார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+