வாய் தவறிய அமைச்சர் வில்வநாதன் திடீர் நீக்கம்: ஜெ. அதிரடி
சென்னை:
கருணாநிதியை வாய் தவறி முதல்வர் என்று குறிப்பிட்ட ஊரக தொழில்துறை துறை அமைச்சரான வில்வநாதனின்பதவியை ஜெயலலிதா அதிரடியாகப் பறித்துள்ளார். டெல்லியில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா இந்தநடவடிக்கையை எடுத்துள்ளார்.
அதே போல மதுரை அருகே குழந்தைகளை மண்ணில் புதைத்து மீட்கும் திருவிழாவில் கலந்து கொண்ட வீட்டுவசதித்துறை அமைச்சர் துரைராஜ் கொடுத்த ராஜினாமாவையும் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார்.
முதல்வரின் பரிந்துரையை ஏற்று இந்த இரு அமைச்சர்களின் பதவிகளும் உடனடியாகப் பறிக்கப்படுவதாக தமிழகஆளுநர் ராம்மோகன் ராவ் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
வில்வநாதன் பதவி பறிபோனதற்கு அவர் வாய் தவறி கருணாநிதியை முதல்வர் என்று குறிப்பிட்டது தான்காரணம் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் திமுக தலைவர்கருணாநிதியை முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக முதல்வர் என்று கூறிவிட்டார்.
உடனே அதைத் திருத்திப் பேசினார். ஆனாலும் அவரது போட்டி கோஷ்டி இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு புகார் கடிதங்களைஅனுப்பியது.
கருணாநிதியை வெறுமனே கருணாநிதி என்று குறிப்பிட வேண்டியது தானே. அதைவிட்டுவிட்டு முன்னாள் முதல்வர் என்றமரியாதையான அடைமொழியை ஏன் பயன்படுத்தினீர்கள் என்று இவருக்கு ஜெயலலிதாவிடம் டோஸ் விழுந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று தான் இவரது வேலூர் மாவட்டத் தலைவர் பதவியை ஜெயலலிதா பறித்தார். அதைக் கூட நமதுஎம்.ஜி.ஆர். இதழில் பார்த்துத் தான் வில்வநாதனே தெரிந்து கொண்டார். இந் நிலையில் இன்று அவரது பதவியும்பறிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வில்வநாதன் பொறுப்பில் இருந்த ஊரக தொழில்துறை இப்போது மின்துறை அமைச்சரான நயினார்நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதே போல துரைராஜ் வசம் இருந்த வீட்டுவசதித்துறை இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் சம்பத் வசம்அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறையை கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தான் சம்பத்திடம் இருந்து ஜெயலலிதாபறித்தார். இப்போது மீண்டும் அவருக்கு வீட்டு வசதித்துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
துரைராஜைப் பொறுத்தவரை அவர் சசிகலாவின் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால் தான் தனது ஜாதியினர்நடத்திய குழந்தைகள் புதைப்பு திருவிழாவில் கலந்து கொண்டார். இவர் சசிகலாவின் அக்காள் மகனும்பெரியகுளம் அதிமுக எம்.பியுமான தினகரனின் ஆதரவாளர். ஆனால், இந்தத் திருவிழாவினால் தமிழக அரசுதேசிய அளவில் விமர்சனத்துக்குள்ளானதால் அதிலிருந்து தப்ப துரைராஜ் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
அதிமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 15 மாதங்களில் 7 வதுமுறையாக அமைச்சரவையில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் இன்றும் மிச்சமிருக்கும் மூன்றரை ஆண்டுகளில்அதிமுகவின் அனைத்து எம்.எம.ஏக்களும் ஒருமுறையாவது அமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துவிடவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications