சென்னை மாநகராட்சி ரகளை: ஆளுநரிடம் திமுகவினர் மனு
சென்னை:
சென்னை மாநகராட்சியில் நேற்று ஏற்பட்ட பயங்கர ரகளை தொடர்பாக தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடம்திமுக கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
நேற்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தின் போது அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கிடையேபயங்கரமான மோதல் ஏற்பட்டது. கத்திகள், சோடா பாட்டில்கள், செருப்புகள், மைக்குகள் ஆகியவை வீசப்பட்டன.
இச்சம்பவத்தில் சில திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் காயமடைந்தனர். சிலருக்குப் பற்கள் உடைந்தன.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக திமுகவினர் இன்று ஆளுநரைச் சந்தித்து புகார் மனுகொடுத்தனர்.
திமுக தொழிற்சங்கத் தலைவரும் எம்.பியுமான குப்புசாமி, சென்னை மாநகராட்சி திமுக தலைவர் மலையன்ஆகியோர் தலைமையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற திமுகவினர், ராமமோகன் ராவிடம் மனுவைக்கொடுத்தனர்.
மேலும் நேற்று நடந்த ரகளையின் போது எடுக்கப்பட்ட வீடியோ படங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டஆதராங்களையும் அவர்கள் ஆளுநரிடம் அளித்தனர்.
அதன் பின்னர் நிருபர்களிடம் குப்புசாமியும் மலையனும் கூறுகையில், இந்தப் புகார் குறித்து நடவடிக்கைஎடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்ததாகத் தெரிவித்தனர்.
திமுகவினரைத் தவிர வேறு சில எதிர்க் கட்சி உறுப்பினர்களும் அப்போது அவர்களுடன் ஆளுநர் மாளிகைக்குச்சென்றனர்.
இதற்கிடையே நேற்றைய சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அதிமுகஉறுப்பினர்களை அமைச்சர் சம்பத் இன்று நேரில் சென்று பார்த்தார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications