அது வந்து...: ஜெ. மழுப்பல்
சென்னை:
சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கத் தான் ஆதரவு தருவதாக கடிதம் எழுதினேனே தவிர, சோனியாதலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தருவதாக ஒருபோதும் கூறவில்லை என முதல்வர் ஜெயலலிதா மழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் கடிதத்தை காங்கிரஸ் வெளியிட்டு மானத்தை வாங்கிவிட்டதால் இன்று பதிலுக்கு ஜெயலலிதா ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவேன் என்று தான் 1999ம் ஆண்டு ஜனாதிபதிக்கு நான் கடிதம்எழுதினேன். அதில், சோனியா பிரதமராக ஆதரவு தருவேன் என்று ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.
தேவே கெளடா தலைமையிலான ஜனதா தளம், ஹெக்டே தலைமையிலான ஜனதா தளம் என்று இருப்பது போல சோனியா காந்திதலைமையிலான காங்கிரஸ் கட்சி என்று தான் குறிப்பிட்டு இருந்தேன்.
ஆனால், அந்தக் கடிதத்துக்கு தவறான அர்த்தம் கற்பித்து இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதன்மூலம் நாட்டை தவறான வழியில் கொண்டுசெல்ல முயன்றுள்ளார் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெய்பால் ரெட்டி. நான் நாட்டை தவறாக வழிநடத்த முயற்சிக்கவில்லை.
ஜெய்பால் ரெட்டியின் பேச்சு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications