கொள்ளேகால் அருகே டாக்டரை கடத்தினான்
கொள்ளேகால்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ள நிலையில் வீரப்பன் இன்று ஒரு டாக்டரையும்கடத்தியுள்ளான்.
கொள்ளேகால் அருகில் உள்ள லோகன்னஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு டாக்டரை இன்று அதிகாலை வீரப்பன்கடத்தியுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர். ஆனால் கடத்தப்பட்ட டாக்டர் யார் என்பது இன்னும்தெரியவில்லை.
வீரப்பனிடம் பணயக் கைதியாக உள்ள நாகப்பாவுக்கு உடல் நலம் குறைந்து விட்டதாகவும் அவருக்கு சிகிச்சைஅளிப்பதற்காகவே இந்த டாக்டரை வீரப்பன் கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இரண்டாவது கடத்தலிலிருந்து வீரப்பன் இன்னும் கொள்ளேகால் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் தான்பதுங்கியுள்ளான் என்று தெரிகிறது.
இதையடுத்து கர்நாடக அதிரடிப்படையினர் அப்பகுதியில் வீரப்பன் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருந்தாலும் டாக்டர் கடத்தப்பட்டதாக வரும் செய்திகளை கர்நாடக டி.ஜி.பியான பாஸ்கர் மறுத்துள்ளார்.
டாக்டர் கடத்தல் வதந்தியா?
தமிழக எல்லைக்குள் தான் அந்த டாக்டர் கடத்தப்பட்டார் என்றும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆனால் தமிழக அதிரடிப்படை டி.ஜி.பியான நடராஜன் இச்செய்தியை மறுத்துள்ளார்.
இது போன்ற வதந்திகள் பரவிக் கொண்டு தான் உள்ளன. இது குறித்து கர்நாடக அதிரடிப்படையினரிடம் தொடர்புகொண்டு கேட்டோம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள் என்று நடராஜன் கூறினார்.
டாக்டர் கடத்தப்பட்டார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எங்களுக்கு வரவில்லை என்று கூறியஅவர், தமிழக எல்லைக்குள் வீரப்பன் நுழைந்தால் உடனடியாகப் பிடிபடுவான் என்றும் அந்த அளவுக்கு எல்லைநெடுகிலும் தமிழக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications