தூத்துக்குடி நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார் நெடுமாறன்
கடலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றொருவழக்கிற்காக நாளை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக நெடுமாறன் கடந்த ஆகஸ்டு 1ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போதுகடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மற்றொரு வழக்கு தொடர்பாக அவர் நாளை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.இதற்காக இன்று நெடுமாறன் கடலூர் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறார்.
இன்று இரவு பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்படும் நெடுமாறன் நாளை காலை தூத்துக்குடி கொண்டுசெல்லப்படுகிறார்.
தூத்துக்குடியில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவர்மீது போடப்பட்டுள்ள ஒரு வழக்கு தொடர்பாகத் தான் நெடுமாறன் நாளை அந்த நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படுகிறார்.












Click it and Unblock the Notifications