சென்னை: எழும்பூரைக் கலக்கிய "ஏ.கே.47"
சென்னை:
"ஏ.கே.47" என ரயில்வே அதிகாரிகளால் செல்லமாக கூறப்படும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்திசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தி அதிகாரிகளைக் கலங்கடித்தார்.
மத்திய ரயில்வே இணை அமைச்சராகப் பதவியேற்றது முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்ட ரயில்நிலையங்களுக்கு அடிக்கடி திடீர் விஜயம் செய்து சோதனை நடத்தி வருகிறார் மூர்த்தி.
அவர் போடும் உத்தரவுகள் மற்றும் கூறும் யோசனைகளை எப்படி அமல்படுத்துவது என்று தெரியாமல் ரயில்வேஅதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று மூர்த்தி திடீர் விஜயம் செய்தார். சுமார் மூன்றரை மணி நேரம்அங்கு இருந்த அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டரைத் திறக்க உத்தரவிட்டார். பிளாட்பாரத்தில் உட்காரவசதியின்றி தரையிலேயே அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகளைப் பார்த்த அவர் கூடுதலாக இருக்கை வசதியைஏற்படுத்துமாறு அந்த இடத்திலேயே அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். தரையில் அமர்ந்திருந்த பெண்பயணிகளிடம் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
ரயிலில் துண்டு போட்டு இடம் பிடிப்போரைக் கைது செய்யுமாறும், பயணிகளிடம் காசு வாங்கிக் கொண்டு சீட்பிடித்து தரும் போர்ட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அமைச்சரின் அதிரடி சோதனை மற்றும் உத்தரவுகளை நேரில் பார்த்த பயணிகள், அவர் அடிக்கடி ரயில்நிலையங்களில் சோதனை போட்டால் நிம்மதியாக சீட் பிடித்து ஊருக்குப் போய்ச் சேரலாம் என்று கூறினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications