தம்பி கொலைக்கு பழிவாங்கவே இந்தக் கடத்தல்: வீரப்பன்
பெங்களூர்:
வீரப்பனிடம் இருந்து நேற்றிரவு இன்னொரு கேசட் வந்து சேர்ந்தது.
அதில், நாகப்பாவை விடுவிக்க வேண்டுமானால் பழ.நெடுமாறனையும் கொளத்தூர் மணியையும் தூதுவர்களாக காட்டுக்குள் அனுப்பவேண்டும் என வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளான்.
ஆனால், சிறையில் இருப்பவர்களை தூதுவராக அனுப்ப முடியாது என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறிவிட்டார்.
இது வீரப்பனிடம் இருந்து வந்துள்ள இரண்டாவது கேசட் என அரசு கூறுகிறது. இந்தக் கேசட்டை சாம்ராஜ்நகர் காமகெரேயில் உள்ளநாகப்பாவின் மனைவிக்கு நேற்று மாலை போஸ்ட் மூலம் வந்து சேர்ந்தது.
உடனே அவர் இது தொடர்பாக அதிரடிப்படையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து கேசட்டை வாங்கிச் சென்றனர்.
நெடுமாறன், கொளத்தூர் மணியை அனுப்புக:
அந்த கேசட்டில் வீரப்பன் கூறியிருப்பதாவது:
முதல்வர் கிருஷ்ணா அவர்களே, வணக்கம். நாகப்பாவை விடுவிக்கக் கோரி கொளத்தூர் மணி ரேடியோவில் எனக்கு கோரிக்கைவிடுத்ததைக் கேட்டேன். அதன் பின்னர் தான் இந்தக் கேசட்டை அனுப்ப முடிவு செய்தேன்.
நாகப்பா அமைச்சராக இருந்தபோது தான் அதிரடிப்படையின் தலைவராக இருந்த சங்கர் பித்ரி எனது தம்பி அர்ஜூனனை கோர்ட்டுக்குகொண்டு செல்லும் வழியில் கொன்றான். அவனுக்கு உதவியாக இருந்ததது நாகப்பா. இதனால் தான் அவரைக் கடத்தி வந்துள்ளேன்.
நான் ஏற்கனவே கேட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்து வருகிறீர்கள். அவற்றை முதலில் நிறைவேற்ற வேண்டும். எனக்குஉங்கள் பணம் எதுவும் தேவையில்லை.
காட்டைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படையை வாபஸ் பெற வேண்டும்.
நாகப்பாவை விடுவிப்பது குறித்துப் பேச பழ.நெடுமாறனையும் கொளத்தூர் மணியையும் அனுப்ப வேண்டும் என்று வீரப்பன்கூறியுள்ளான்.
நடுங்கிய குரலில் நாகப்பா பேச்சு:
நாகப்பாவும் இந்தக் கேசட்டில் பேசியுள்ளார். அவரது குரல் மிகவும் சோர்ந்த நிலையில் நடுக்கமானதாக உள்ளது. கேசட்டில் அவர்கூறியிருப்பதாவது:
நான் உடல் நலத்துடன் இருக்கிறேன். உணவுப் பிரச்சனை தான் மிகுந்த சிரமமத்தைத் தருகிறது. எனது உயிர் முதல்வர் கிருஷ்ணாவின்கையில் தான் உள்ளது. வீரப்பனின் கோரிக்கைகளை கிருஷ்ணா ஏற்க வேண்டும். காட்டைச் சுற்றியுள்ள போலீஸ் படையை கிருஷ்ணாஉடனே திரும்பப் பெற வேண்டும்.
குழப்பம்:
இந்த கேசட் எங்கிருந்து வந்தது என்பதில் குழப்பம் நிலவுகிறது. கர்நாடக மாநிலம் பிடுதி என்ற இடத்தில் இருந்து இந்த கேசட் பார்சல் மூலம்நாகப்பா மனைவிக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் ஆனால், இது பெங்களூரில் இருந்து வந்ததாக இன்னொரு தகவல்தெரிவிக்கிறது.
மேலும் இந்தக் கேசட்டின் நம்பகத்தன்மை குறித்தும் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காட்டுக்குள் இருக்கும்வீரப்பனால் எப்படி கேசட் அனுப்ப முடிந்தது என்பது குறித்து ஆராய போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணா பேட்டி:
இந் நிலையில் டெல்லி செல்லும் முன் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கைதாகி கர்நாடக சிறையில் இருக்கும்கொளத்தூர் மணியை எப்படி தூதுவராக அனுப்ப முடியும்? அதே போல நெடுமாறனும் தமிழக சிறையில் இருக்கிறார். அவரை எப்படிஅனுப்ப முடியும் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications