அணையை பூட்டி, மணல் மூட்டைகள் போட்டு நீரை தடுக்கும் கர்நாடக விவசாயிகள்
சென்னை:
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்ட காவிரி நீரை விவசாயிகள் மணல்மூட்டைகளைப் போட்டு தடுத்து வருகினறனர்.
மேலும் கபினி அணைக்கட்டின் நீர் செல்லும் கதவுகள் விவசாயிகளின் மிரட்டலால் மூடப்பட்டுவிட்டன. இதனால்காவிரி நீர் இன்று வரை தமிழகத்துக்கு வந்து சேரவில்லை.
கர்நாடகத்தின் இந்தச் செயல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது என்பது குறிப்பிடக்கத்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கடந்த புதன்கிழமையே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திவிட்டிருக்கவேண்டும். ஆனால், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் கடந்த வியாழக்கிழமை இரவு தான் 1.25 டிஎம்சி தண்ணீர்திறந்து விடப்பட்டது.
கபினி அணைக்கட்டில் இருந்து இந்தத் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதாகக் கர்நாடகம் தெரிவித்தது.இதையடுத்து 2 நாளில் இந்த நீர் ஓகேனகல் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், நேற்று மாண்டியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள், டிராக்டர்களில் வந்த ஆயிரக்கணக்கானவிவசாயிகள் கபினி அணைக்கட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த போலீசாரை அடித்து விரட்டிவிட்டுஅணைக்கட்டின் அதிகாரிகள் அறைக்குள் நுழைந்தனர்.
உடனே கபினி அணையை மூட உத்தரவிட்டனர். அதிகாரிகள் யோசிக்கவே அவர்களைத் தாக்க முயன்றனர்.இதையடுத்து அணை மூடப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது. விவசாயிகள்நேற்று இரவு முழுவதும் அணைக்கட்டிலேயே சமைத்து உண்டு தங்கியிருந்தனர்.
நேற்று காலையிலேயே தொடங்கிய விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை கர்நாடக அரசுகண்டுகொள்ளவில்லை. எப்படியோ தமிழகத்துக்குத் தண்ணீர் செல்வது நின்றுவிட்ட திருப்தியில் இருந்தது.
கிட்டத்தட்ட 24 மணி நேரம் தமிழகத்துக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் இனறு காலை தான்அதிகாரிகள் குழுவினர் விவசாயிளுடன் பேச்சு நடத்தி அவர்களிடம் இருந்த அணைக்கட்டு கதவுகளின் சாவிகளைவாங்கினர்.
நீரைத் தராவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் பெயர் கெட்டுவிடும் என்று அவர்களிடம் கூறியஅதிகாரிகள் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
விவசாயிகள் கலைந்து சென்ற பின்னர் இன்று காலை 9 மணியளவில் தான் மீண்டும் கபினி அணையைஅதிகாரிகள் திறந்தனர்.
அதே நேரத்தில் மாண்டியா மாவட்டத்தின் பல இடங்களிலும் தமிழகத்துக்குக் காவிரி நீர் செல்லும் கால்வாய்களில்மணல் மூட்டைகளை போட்டு அடைக்கும் செயலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இந்தக் கால்வாய்களில் தமிழகத்துக்கு தண்ணீர் செல்வது தடை பட்டுள்ளது. இதை போலீசாரும்அதிகாரிகளோ கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இந்த மணல் மூட்டைகளையும் தாண்டித் தான் நீர் தமிழகத்துக்கு வந்து சேர வேண்டும்.
இந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் கர்நாடக அதிகாரிகளின் டபுள்-ஆக்ட் காரணமாக இன்று காலை வரைகாவிரி நீர் ஒகேனகலை அடையவில்லை.
இந்த மணல் மூட்டைத் தடைகளையும் மீறி காவிரி நீர் இன்று இரவு தர்மபுரி மாவட்டத்தைத் தொடும் என தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவ்வாறு நீர் வந்தால் இரவே மேட்டூரையும்காவிரி நீர் அடைந்துவிடும்.
தமிழக அதிகாரிகளின் குழு மாற வேடத்தில் கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் உள்ள பிலிகுண்டா பகுதியில்ஆய்வு நடத்தினர். அப்போது அந்தப் பகுதிக்கு காவிரி நீர் வரத் தொடங்கிவிட்டது தெரியவந்தது. இங்குவந்துவிட்ட நீர் அடுத்தபடியாக தருமபுரியைத் தொடும்.
அக்டோபர் 2வது வாரம் வரை கர்நாடத்தில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்தால் தான் தஞ்சாவூரில் சம்பா நெல்விவசாயத்தை செய்ய முடியும். பாதியில் நிறுத்தினால் குறுவைப் பயிருக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும் எனவும்அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் கர்நாடகத்தில் இருந்து நீர் வரும் என்ற நம்பிக்கையில் மேட்டூர் அணையில் இருந்து சம்பா நெல்விதைப்புக்காக நீர் திறந்துவிடப்பட்டுவிட்டது.
-->












Click it and Unblock the Notifications