ஜெயலலிதாவால் பலிகடா ஆனது தமிழகம்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சினையில், ஜெயலலிாதவின் தான்தோன்றித்தனமான போக்கால் தமிழக மக்களை மத்திய அரசு பழி வாங்கி விட்டது என்றுகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,காவிரிப் பிரச்சினையில் ஜெயலலிதாவின் அணுகுமுறை தோற்று விட்டது. அவரதுதான்தோன்றித்தனமாக போக்கால் தமிழக விவசாயிகளை மத்திய அரசும், பிரதமர் வாஜ்பாயும் பழி வாங்கி விட்டனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விதித்த பின்னர், அதை காவிரி நதி நீர் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. இது கோர்ட் அவமதிப்பாகும், நாட்டின்உயரிய சட்ட அமைப்பையே மத்திய அரசு அவமதித்து விட்டது.

பிரதமரின் நடவடிக்கை அவர் மீது இருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையையும் போக்கி விட்டது. கர்நாடகத்தின் பிடிவாதத்திற்கு வெற்றிகிடைத்து விட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னிஷ்டப்படி செயல்படுவதை நிறுத்த வேண்டும். அனைத்துக் கட்சியினரின் ஆலோசனையைப் பெற்றுஅதன்படி செயல்பட்டிருக்க வேண்டும்.

அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்போடு அவர் செயல்பட்டிருந்தால் தமிழகத்தின் குரல் உரத்துக் கேட்டிருக்கும், காவிரிப் பிரச்சினையில்தமிழகம் ஒற்றுமையோடு இருக்கிறது என்று மத்திய அரசும் பயப்பட்டிருக்கும் என்று இளங்கோவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெ.வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்:

இந் நிலையில் சோனியா காந்தியை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்ததைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர்இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ்தொண்டர்கள் கலந்து கொண்டனர். குமரி அனந்தன், தங்கபாலு போன்ற மூத்த தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

இதில் பேசிய வாசன், சோனியாவை விமர்சிப்பதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, ஜெயலலிதா தனது பொய்யானஅவதூறு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும். பொறுப்பான முதல்வராக இருந்து மக்களுக்கு நன்மைை செய்வதை விட்டுவிட்டுபிரச்சனைகளில் இருந்து தப்ப இப்படி திசை திருப்பும் பிரச்சாரத்தில் ஜெயலலிதா ஈடுபடுகிறார் என்றார்.

மதுரையில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையிலும் கடலூரில் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள்நடந்தன. இதுதவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் நடந்த போராட்டங்களுக்கு முன்னணித் தலைவர்கள் தலைமை வகித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+