வீரப்பனை "மயக்கி" பிடிக்க அதிரடிப்படை திட்டம்
சத்தியமங்கலம்:
காட்டுக்குள் ஒளிந்துள்ள வீரப்பனைப் பிடிக்க மயக்க மருந்தைப் பயன்படுத்துவது குறித்து அதிரடிப்படையோசித்து வருகிறது.
சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்று 16 நாட்களாகிவிட்டன. இன்னும் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து வீரப்பனைப் பிடிக்கும் முயற்சிகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அவன் சிக்குவதாக இல்லை.
இந் நிலையில் புதிய யுத்தி ஒன்றை கர்நாடக அதிரடிப்படை மேற்கொள்ள யோசித்து வருகிறது. காட்டுக்குள்,வீரப்பன் இருக்கும் இடத்தை ஹெலிகாப்டர் உதவியினால் சரியான முறையில் கண்டறிந்த பின்னர் அந்தப்பகுதியில் மயக்க மருந்தைப் பரப்பி வீரப்பனை மடக்கிப் பிடிக்க முடியுமா என்று அதிரடிப்படையினர் யோசித்துவருகிறார்கள்.
இதற்கிடையே, நவீன ரக கேமராக்கள், இருட்டிலும் மனித நடமாட்டத்தைக் கண்டறியும் தொலைநோக்கிகள்அடங்கிய ராணுவ ஹெலிகாப்டர்களை அதிரடிப்படையினர் தற்போது பயன்படுத்தி வீரப்பனை தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications