தமிழர்கள் தாக்கப்படும் அபாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெங்களூரில் நாளை பல்வேறு கன்னட அமைப்புகளும், நடிகர் ராஜ்குமார் ரசிகர் சங்கமும் இணைந்து நடத்தும்காவிரி நீர் திறப்பு எதிர்ப்பு பந்த் போராட்டத்தின்போது தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்புகொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீர் விடுவதை எதிர்த்து பல்வேறு கன்னட அமைப்புகள் பெங்களூரில் நாளை பந்த்நடத்தவுள்ளன.

இந்தப் போராட்டத்திற்கு ராஜ்குமார் ரசிகர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. ராஜ்குமார் ரசிகர் சங்கத்தைச்சேர்ந்தவர்கள்தான் இதற்கு முன்பு பல முறை தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரியைக் காரணம் காட்டி கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை தலைதூக்கியிருக்கிறது.

இப்படி பதற்றமான சூழ்நிலை உள்ள நிலையில், 12ம் தேதி பந்த் நடத்தப் பாவதாக பல்வேறு கன்னடஅமைப்புகள் அறிவித்துள்ளன. அதற்கு ராஜ்குமார் ரசிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இவர்களின் பந்த் போராட்டத்தின்போது லட்சக்கணக்கான பெங்களூர்த் தமிழர்களின் பாதுகாப்புக்கு குந்தகம்ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் உயிரையும், உடமையையும் பாதுகாக்கும் பொறுப்பு கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு உள்ளது.

தமிழக அரசும், குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வருடன் பேசி தமிழர்களின் பாதுகாப்புகுறித்து அறிவுறுத்த வேண்டும்.

தமிழர் பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினரை நிறுத்தி தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+