காவிரி: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்திற்குக் காவிரியில் 0.8 டி.எம்.சி. நீரைத் திறந்து விட்டால் போதும் என்ற காவிரி ஆணையத்தின்உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தமிழகத்திற்கு தினமும் காவிரியில் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கடந்த வாரம் கர்நாடகஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சமீபத்தில் கூடிய காவிரி நதி நீர் ஆணையம், 1.25 டி.எம்.சிக்குப் பதிலாக 0.8 டி.எம்.சி. நீரைகர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் தமிழக அரசு மிகவும் அதிருப்தி அடைந்தது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.

அதன்படி இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

காவிரியில் தமிழகத்திற்காக தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே அளித்தஉத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம்:

இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர்கிருஷ்ணா அழைப்பு விடுத்துள்ளார்.

கிருஷ்ணா தலைமையில் இன்று மாலை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

ஆனால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறும் பலகன்னட அமைப்புகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

இந்த அமைப்புகள் தான் நாளை பெங்களூரில் பந்த் நடத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+