காவிரி: வாய் மூடிக் கிடக்கும் தமிழக கட்சிகள் - ஜெ. வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் போராடும் நிலையில்தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் வாய் மூடிக் கிடப்பது வேதனையாக உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறினார்.

சென்னையில் இன்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா பேசுகையில்,

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடக் கூடாது என்பதில் கர்நாடக அரசு மட்டுமல்லாமல் அம்மாநில எதிர்க்கட்சிகளும் கூட உறுதியாக உள்ளன. இவ்விவகாரத்தில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்ஒற்றுமையுடன் போராடி வருகின்றன.

ஆனால் காவிரிப் பிரச்சனை என்பது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. அது ஒவ்வொரு தமிழ்க் குடிமகனின்ஜீவாதாரப் பிரச்சனை.

காவிரி இல்லையேல் தமிழக மக்களின் வாழ்வே இல்லை என்ற நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது.

இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளும் வாய் மூடிக் கிடப்பது தான் வேதனையாக உள்ளது. இதைக்கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பிரதமர் வாஜ்பாய் வெளிநாடு (அமெரிக்கா) சென்று வந்த பிறகு தான் காவிரி ஆணையம் கூட்டப்படுவதாகஇருந்தது. ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மத்திய அமைச்சரான அனந்தகுமார் தான் வாஜ்பாயைவலியுறுத்தி உடனடியாக ஆணையக் கூட்டத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தினார்.

இதனால் தான் கடந்த சனிக்கிழமை காவிரி ஆணையக் கூட்டம் அவசரக் கோலத்தில் கூட்டப்பட்டது.தெளிவில்லாத, ஏற்றுக் கொள்ளவே முடியாத முடிவையும் அக்கூட்டத்தில் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.

வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையத்தின் இந்தத் தவறான முடிவைத் தட்டிக் கேட்க தமிழகத்தைச் சேர்ந்தமத்திய அமைச்சர்களும் தட்டிக் கேட்கத் தவறி விட்டனர் என்றார் ஜெயலலிதா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+