இலங்கைக்கு தப்ப முயன்ற 16 அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமேஸ்வரத்திலிருந்து கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற 16 அகதிகளை சுங்கத்துறைஅதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த அகதிகள் அனைவரும் மண்டபம் முகாமில் இருந்தவர்கள்.
அங்கிருந்து அவர்கள் வெளியேறி, கள்ளத் தோணிகள் மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி அவர்கள் கள்ளத் தோணிகளில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.
பின்னர் 16 அகதிகளும் மீண்டும் மண்டபம் முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் தீவிரவிசாரணையும் நடந்து வருகிறது.
-->












Click it and Unblock the Notifications