இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பெங்களூர்::
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கன்னட அமைப்புகள் இன்று நடத்தும்பந்த் காரணமாக பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர ஏராளமான தனியார் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்ஆகியவையும் நேற்றே விடுமுறை அறிவித்து விட்டன.
சாலைகளில் வாகனப் போக்குவரத்து அவ்வளவாக இல்லை. ஓரிரண்டு கார்கள், டூ வீலர்கள் மற்றும் ஆட்டோக்கள்மட்டுமே ஆங்காங்கு ஓடிக் கொண்டிருந்தன.
தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை வெளியில் எடுத்து வர வேண்டாம்என்று ஏற்கனவே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் இன்று காலை சிறுசிறு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் எங்கிருந்தோவந்த கும்பல்கள் அந்தக் கடைகளையும் உடனே அடைக்குமாறு மிரட்டியதைத் தொடர்ந்து அவையும் உடனடியாகஇழுத்து மூடப்பட்டன.
இதையடுத்து பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு பெங்களூர் மாநகர் முழுவதும் போலீஸ்வாகனங்கள் ரோந்து சுற்றி வருகின்றன. இதுவரை தகாத சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
அமைதியான பந்த்:
இந்நிலையில் பெங்களூரின் முக்கிய சாலைகள் அனைத்தும் இன்றைய பந்த் காரணமாக வெறிச்சோடிக் கிடந்தன.எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மெஜஸ்டிக் பஸ் நிலையம் இன்று படு அமைதியுடன் காணப்பட்டது.
ஆனாலும் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதால் பந்த் மிகவும் அமைதியாகவே நடந்து வருவதாகபெங்களூர் மாநகரப் போலீஸ் கமிஷனர் சங்கிலியானா கூறினார்.
அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படாத போதிலும், ஊழியர்களின் வருகை இன்றுகுறைவாகவே காணப்பட்டது. ஏராளமான வங்கிகளிலும் இதே நிலையே நீடித்தது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications