அமைதியாக முடிந்த பந்த்
பெங்களூர்::
காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூடத் திறந்து விடக் கூடாது என்று கோரி சில கன்னட அமைப்புகள்இன்று பெங்களூரில் நடத்திய முழு அடைப்பு போராட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், சினிமாதியேட்டர்கள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன.
பஸ் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டதால் ஏராளமான பெங்களூர் நகர மக்கள் வேறு இடங்களுக்குச்செல்ல முடியாமல், முக்கியமாக, வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
நகரில் சிற்சில ஆட்டோக்கள் மட்டும் ஓடின. அவையும் வாடகைக் கட்டணமாக "யானை விலை, குதிரைவிலை"யாக மக்களிடம் நன்றாகக் "கறந்து" விட்டனர். பெங்களூரிலிருந்து ஓசூர் செல்வதற்கு பல கார்களில்மக்களிடமிருந்து கிட்டத்தட்ட தலா ரூ.25 வரை வசூலிக்கப்பட்டன.
பந்த் காரணமாக இன்று பெங்களூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.இன்று நடைபெற வேண்டிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்களை சாலையில் ஓட்ட வேண்டாம் என்று நேற்றேபெங்களூர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் பெரும்பாலான தமிழகப் பதிவு எண் கொண்டவாகனங்கள் பெங்களூர் சாலைகளில் இன்று ஓடவில்லை. ஓரிருவர் மட்டும் தைரியமாக தங்களுடைய டூவீலர்களை ஓட்டிக் கொண்டு சென்றனர்.
கடந்த 1991ம் ஆண்டு இதே காவிரிப் பிரச்சனை தொடர்பாக பெங்களூரில் ஏற்பட்ட பயங்கரமான வன்முறையில்12 பேர் வரை கொல்லப்பட்டனர். இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் போலீசார்மிகவும் கவனமாக இருந்தனர்.
மேலும் நேற்று இரவே சுமார் 500 பேர் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனால் இன்றைய பந்த்தின் போது எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களோ அசம்பாவிதமோநடைபெறவில்லை. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தகாத செயல் எதுவும் நடக்கவில்லை.
பொதுவாக இன்றைய 12 மணி நேர (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) பெங்களூர் பந்த் வெகுஅமைதியாக நடந்து முடிந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்குப் பின்னர் சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீரடைந்தது. ஒன்றன் பின் ஒன்றாகக் கடைகளும்ஹோட்டல்களும் திறக்கப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications