""தமிழ் மந்திரம் புரியாத கடவுளை ஏன் வணங்க வேண்டும்?"" - கருணாநிதி
சென்னை:
கரூர் அருகே உள்ள ஒரு கோவிலில் சமீபத்தில் தமிழிலேயே மந்திரங்கள் கூறப்பட்டு கும்பாபிஷேக விழாநடைபெற்றதை எதிர்த்தவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
கரூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் உள்ள திருமுக்கூடலூர் கோவிலில் தமிழிலேயே மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதற்கு காஞ்சி சங்கராச்சாரியாரும் தமிழக இந்து சமய அறநிலையத்துறையும் எதிர்ப்பும் அதிருப்தியும்தெரிவித்தனர்.
ஆகம முறைப்படி வேத மந்திரங்களை ஓதாமல் இப்படி தமிழிலேயே மந்திரத்தைச் சொன்னால் அதற்குரிய பலன்கிடைக்காது என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழில் மந்திரம் ஓதப்பட்டதை எதிர்ப்பவர்களை கருணாநிதி இன்று கடுமையாகக் கண்டித்தார்.சென்னையில் ஒரு திருமண விழாவில் அவர் பேசுகையில்,
சமஸ்கிருத மொழியிலேயே கோவில்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுவது என்பது வெறும் மூட நம்பிக்கையேதவிர வேறொன்றும் இல்லை.
தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படுவதை ஏற்காதவர்கள் தமிழகத்திலேயே இருப்பதற்கு அருகதை இல்லாதவர்கள்.
தமிழில் கூறப்படும் மந்திரங்கள் எந்தக் கடவுளுக்காவது கேட்கவில்லை அல்லது புரியவில்லை என்றால் அந்தக்கடவுளுக்கும் தமிழகத்தில் இடம் கிடையாது.
""தமிழ் தெரிந்தால் நீயும் கடவுளாக நீ இங்கேயே இரு. இல்லையென்றால் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேபோ"".
இப்படி நான் கூறுவதால் நான் கடவுளுக்கு எதிரி என்று கூறிவிட முடியாது. ஆனால் தமிழைப் புரிந்து கொள்ளமுடியாத கடவுளை நாம் ஏன் வணங்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications