ஆண்டிப்பட்டி மருத்துவக் கல்லூரி: 16ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக முதல்வர் ஜெயலலிதாவரும் 16ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

ஜெயலலிதா வரும் 16ம் தேதி ஆண்டிப்பட்டியில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அன்று காலைசென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனிசெல்கிறார்.

பின்னர் அவருடைய சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட மேல்மங்கலம்கிராமத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

இதுதவிர, புதிதாக ஆண்டிப்பட்டியில் தொடங்கப்பட்டிருக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியையும்ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.

அதன் பின்னர் பல்வேறு நலத் திட்டங்களையும் அவர் துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்து,அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஜெயலலிதா ஆண்டிப்பட்டிக்கு சென்றிருந்தார். ஆண்டிப்பட்டியில் வென்ற பின் அவர்அங்கு சென்றது அதுதான் முதல் முறையாகும். தற்போது இரண்டாவது முறையாக அவர்ஆண்டிப்பட்டிக்குசெல்கிறார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+