இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் கருணாநிதி: பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் பக்தர் என்று கூறிக் கொண்டு இந்துக்களின் மனத்தை திமுக தலைவர் கருணாநிதி புண்படுத்தி விட்டார் என்றுதமிழக பாஜக பொதுச் செயலாளரான ராஜா கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் ராஜா கூறுகையில்,
கருணாநிதி முதலில் தன் குடும்பத்தில் உள்ளவர்களைக் கட்டுக்குள் வைக்கட்டும். அவருடைய குடும்பத்தினர்இன்னும் கோவில்களுக்குச் சென்று கொண்டு தான் உள்ளனர்.
இப்படி இருக்கும் போது எதையும் யோசிக்காமல் பேசுவதே கருணாநிதியின் வழக்கமாகப் போய்விட்டது.
தமிழ் பக்தர் என்று கூறிக் கொண்டு அவர் பேசியது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தி விட்டது.
சிறுபான்மையினரின் ஓட்டுக்களை மனதில் வைத்துக் கொண்டு தான் கருணாநிதி இந்துக் கடவுளைத் தாக்கிப்பேசியுள்ளார். ஆனால் இதனால் அவர் இந்துக்களின் ஓட்டு வங்கியை இழந்து விடுவார் என்பது மட்டும் நிச்சயம்என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications