பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை: கணவர், மாமியார் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புகுந்த வீட்டினர் கொடுமை காரணமாக சென்னையைச் சேர்ந்த பெண் கம்ப்யூட்டர் என்ஜீனியர் கிணற்றில் குதித்துத்தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா. இவருக்கும்நங்கநல்லூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு இருவரும்அமெரிக்காவில் பணியாற்றி வந்தனர். சமீபத்தில் தான் இருவரும் தாயகம் திரும்பினர்.

சென்னை திரும்பிய பின் மாமியார் வீட்டில் கணவருடன் வசித்து வந்தார் பத்மபிரியா. ஆனால் மாமியார் அடிக்கடிகொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த பத்மபிரியா, தனிக்குடித்தனம் போய் விட்டால் பிரச்சினை இருக்காது என்று கணவரிடம்கூறியுள்ளார். ஆனால் அதை ஸ்ரீகாந்த் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் கணவர் வீட்டில் ஏற்பட்ட பூசலையடுத்து தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார் பத்மபிரியா. நேற்றுஇரவு செல் போன் மூலம் கணவர் ஸ்ரீகாந்த்துடன் பேசி தனிக்குடித்தனம் போய் விடலாம் என்று மீண்டும் அவர்வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் தனிக்குடித்தனம் செல்ல ஸ்ரீகாந்த் முடியாது என்று மறுபடியும் கூறி விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்துபக்கத்தில் இருந்த ஒரு கிணற்றில் குதித்து விட்டார் பத்மபிரியா.

நீண்ட நேரமாக பத்மபிரியாவைக் காணாமல் யோசித்த சீனிவாசன் குடும்பத்தினர் வீடு முழுவதும் தேடினர்.அப்போது தான் கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.

பத்மபிரியா தற்கொலை தொடர்பாக ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய தாய் ஆகிய இருவரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+