தாய்லாந்தில் புலிகள்-இலங்கை அரசு பேச்சு: நாளை துவக்கம்
பாங்காக்:
சுமார் 20 ஆண்டு கால இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைஅரசுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை நாளை தாய்லாந்தில் துவங்குகிறது.
தாய்லாந்து தலைநகரான பாங்காக் நகரின் சத்தாஹிப்பில் உள்ள கடற்படைத் தளத்தில் நாளை முதற்கட்டப்பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. மிகவும் ரகசியமாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
துவக்கமாக தாய்லாந்து மற்றும் நார்வே அதிகாரிகள் நாளை சிறிது நேரம் பேசுவார்கள். அதன் பின்னர் புலிகளின்பிரதிநிதிகளும் இலங்கை அரசின் பிரதிநிதிகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் துவக்குவார்கள்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் நிரந்தரமாக்குவது தொடர்பாக முதல் நாள் பேச்சின் போதுவிவாதிக்கப்படவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து இலங்கையின் வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களுக்குமறுவாழ்வு அளிப்பது, பல்வேறு அரசியல் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை புலிகள்நாளைய பேச்சுவார்த்தையின் போது முன் வைக்கவுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இடைக்கால அரசை நியமிப்பது தொடர்பாக இலங்கை அரசு சார்பில்விவாதிக்கப்படும் என்று நேற்று பெய்ரிஸ் தெரிவித்தார்.
திங்கள்கிழமையும் (நாளை), செவ்வாய்க்கிழமையும் சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும்புதன்கிழமை 3 மணி நேரம் பேச்சு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடக்கும்என்றும் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் பெய்ரிஸ்கூறினார்.
புலிகளின் சார்பில் அதன் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம், அவருடைய மனைவி அடேல்பாலசிங்கம், புலிகளின் சட்ட ஆலோசகர் வி. ருத்ரகுமார் மற்றும் மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டுத்துறை நிபுணர்டாக்டர் ஜாய் மகேஸ்வரன் ஆகிய நான்கு பேரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவரும் நேற்றே தாய்லாந்துக்கு வந்து சேர்ந்து விட்டனர்.
இலங்கை அரசின் சார்பில் அந்நாட்டின் அரசியல் விவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பெய்ரிஸ், பொருளாதாரசீர்திருத்தத்துறை அமைச்சர் மிலிண்டா மாரகொடா, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் கப்பல் மற்றும்துறைமுக மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ரப் ஹக்கீம் மற்றும் இலங்கை அரசின் அமைதிக் குழுத் தலைவரானபெர்னார்ட் குணதிலகே ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
இவர்களும் நேற்று தாய்லாந்துக்கு வந்து விட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications