சென்னையில் 2 பிரிவுகளாக இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 பிரிவுகளாக விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்த போலீஸார்அனுமதி அளித்துள்ளனர்.

ராம கோபாலன் தலைமையிலான இந்து முன்னணி மற்றும் 8 பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற்பகல் 1.30மணி முதல் மாலை 6.30 வரை விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள்.

முன்னதாக விநாயகர் முரளி தலைமையிலான இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை 6.30மணியிலிருந்து ஊர்வலமாகச் சென்று விநாயகர் சிலைகளை கரைக்கத் தொடங்கினார்கள்.

ஒரே ஊர்வலமாக அனைத்துப் பிரிவினரும் விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்க முயற்சிசெய்யுமாறு போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதற்கு ராம கோபாலன் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். விநாயகர் முரளி தலைமையிலானவர்கள்வன்முறையைத் தூண்டி விடுவார்கள். அவர்களை எங்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவர்திட்டவட்டமாக கூறி விட்டதால், முரளி தலைமையிலான பிரிவுக்கு காலையில் ஊர்வலம் நடத்த போலீஸார்அனுமதி வழங்கினர்.

விநாயகர் சிலை ஊர்வலம் நடப்பதையொட்டி ஊர்வலப் பாதை நெடுகிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குகுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்து முன்னணி (ஜெயராமன் பிரிவு) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் விநாயகர்சிலைகள் இன்று காலை முதல் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.

ஓட்டேரியிலிருந்து ஒரு ஊர்வலமும், திருவட்டீஸ்வரன் பேட்டையிலிருந்து இன்னொரு ஊர்வலமும் பிரமாண்டசிலைகளுடன் கிளம்பின.

அனைத்து சிலைகளும் மெரீனா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கத்திற்குப் பின்னே கொண்டு வரப்பட்டு கடலில்கரைக்கப்பட்டன. பெரிய சிலைகள் கிரேன் மூலம் தூக்கப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சிறிய சிலைகளைபக்தர்களே கையில் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று கரைத்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+