எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் தமிழ்நாட்டையே...
கோயம்புத்தூர்:
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வரும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் கொடும்பாவியை கோயம்புத்தூர் கல்லூரி மாணவர்கள் எரித்துபோராட்டம் நடத்தினர்.
கோவை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த 150 மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம்எழுப்பினர்.
இதற்கிடையே தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை எதிர்த்து கர்நாடகத்தில் கபினி அணைக் கட்டுப் பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள்நடந்து வருகின்றன.
இதனால் மைசூர்- பெங்களூர் இடையிலான பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து நேற்று முழுவதுமாகநிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடங்கியது. ஆனால், ரயில் தண்டவாளங்களில் நின்று போராட்டக்காரர்கள் ஆர்பாட்டம் செய்வதாலவ்ரயில்கள் தொடர்ந்து இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மைசூர்- தஞ்சாவூர் இடையிலான காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் மாண்டியா மாவட்டம் பையதரஹள்ளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் (பெரும்பாலும் தமிழர்கள்) அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், பஸ்களும் திடீரெனதடுக்கப்படுவதால் பஸ்களிலும் போக முடியாமல் இவர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்துக்கு கடந்த 3ம் தேதி முதல் காவிரி ஆணையக் கூட்டம் நடந்த 8ம் தேதி வரை எவ்வளவு தண்ணீர் தரப்பட்டது என்ற விவரத்தைஉச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. இதனால் அரைகுறையாகத் தண்ணீர் விட்ட கர்நாடகம் கலவரமடைந்தது.
விவசாயிகள் அணையை மூடிவிட்டனர் என்ற நொண்டிச் சாக்கை உச்ச நீதிமன்றத்தில் கூற முடியாது என்பதால் 3ம் தேதி முதல் 8ம் தேதிவரை தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தந்திருக்க வேண்டுமோ அந்தத் தண்ணீரை கர்நாடகம் இப்போது தான் திறந்துவிட்டு வருகிறது.
இதை எதிர்த்து அப் பகுதி விவசாயிகளும் பல்வேறு கட்சியினரும் கபினி அணைக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார்அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் தாக்கியதில் 50 பேர் காயமடைந்தனர். போராட்டக்காரக்கள் தாக்கியதில் பல போலீசாரும் காயமடைந்தனர். இதையடுத்துபோலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
முன்பே இந்தப் போராட்டக்காரர்களை ஒடுக்கி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு தந்திருக்க வேண்டும். ஆனால், விவசாயிகள்போராட்டம் என்ற பெயரில் தண்ணீர் தராமல் ஏமாற்றியது.
இப்போது உச்ச நிதிமன்றம் எவ்வளவு தண்ணீர் தரப்பட்டது என்ற கேள்வி எழுப்பியுள்ளதால் போராட்டக்காரர்களை அடித்து விரட்டஆரம்பித்துள்ளது கர்நாடக அரசு.
தமிழகத்துக்கு விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட்டுள்ளதாக கர்நாடகம் கூறுகிறது. ஆனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மிகக்குறைவாகவே உள்ளது. அணையின் நீர் மட்டம் 57.71 அடியாகக் குறைந்துவிட்டது.
இதனால் அணையில் இருந்து தஞ்சை பகுதிக்கு விவசாயத்துக்குத் திறந்திவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 651 அடியாகக்குறைக்கப்பட்டுவிட்டது.
நீர் விடுவதாகக் கூறி கர்நாடகம் இந்த முறையும் ஏமாற்றுவதாகவே தெரிகிறது. இத்தனைக்கும் கபினி அணையின் நீர் பிடிப்புப் பகுதியில்நல்ல மழை பெய்து வருகிறது. அணைக்கு விநாடிக்கு 5,800 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தமிழகத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக முன்னாள் எம்.பி மாதே கெளடா தலைமையில்விவசாயிகள், மாணவர்கள், பல்வேறு கட்சியினர் ரகசியக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications