திமுகவுக்கு இறுதி அத்தியாயம் எழுதுகிறார் கருணாநிதி: ராம.கோபாலன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதியின் தோல்வியைக் கண்ணால் காண ஆசைப்படுகிறேன் என்று இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் கூறினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:கருணாநிதி முதலில் நாத்திகராக இருந்தவர். பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் ஆத்திகராக வேஷம் போட்டவர். இப்போது அவரதுவேஷம் கலைந்துவிட்டது.
இந்து மதத் துறவிகளை விமர்சித்து வரும் கருணாநிதியின் தோல்வியை கண்ணால் காண ஆசைப்படுகிறேன்.
திமுகவின் இறுதி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அதிமுக அரசு முழு ஒத்துழைப்பு தந்து வருகிறது என்றார் ராம.கோபாலன்.
-->












Click it and Unblock the Notifications