மாணவிகளிடம் "டபுள் மீனிங்"கில் பேசிய தலைமை ஆசிரியர்
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாணவிகளிடம் டபுள் மீனிங்கில் பேசுவதும், அவர்களைத் தொடுவதும்,உரசுவதுமாக இருந்த தலைமை ஆசிரியர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் ஏ.ஆர்.ஆர். மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சிரஞ்சீவி என்பவர் தலைமை ஆசியராகஇருந்து வருகிறார். இவரது கேரக்டர் ஆரம்பத்தில் இருந்தே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
மாணவிகளை தொடாமலே இவர் பேச மாட்டாராம். செல்லமாக கன்னத்தில் கிள்ளுவது, கையைப் பிடித்துக்கொண்டு பேசுவது, வேண்டும் என்றே உரசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது என படு "காம" நெடியுடன் நடந்துகொள்வாராம்.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். கொதித்துப் போன பெற்றோர்கள்,உடனடியாகப் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட கல்வி அதிகாரிக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "டபுள் மீனிங்" தலைமை ஆசிரியர் மீதுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications