வீரப்பனிடம் தூது செல்ல கொளத்தூர் மணி தம்பி மறுப்பு
ஈரோடு:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காகத் தூது செல்லப் போக மாட்டேன்என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவரான கொளத்தூர் மணியின் தம்பி பழனிச்சாமி மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில்,
கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது என் அண்ணன் தான் தூதராகச் சென்றார்.
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சென்ற அவரை அனைவரும் மிகவும் கொச்சைப்படுத்தி விட்டனர்.அவருக்கு ஏற்பட்ட கதி எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் வரக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.
ஏற்கனவே தூது சென்றவர்களின் நிலையும் தற்போது மிகவும் பரிதாபமாகவே உள்ளது. மேலும் வீரப்பனிடம்தூது செல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி கிடையாது.
எனவே நான் தூது செல்லத் தயாராக இல்லை. தூது செல்வதை நான் மட்டுமில்லாமல் என் குடும்பத்தினரும்ஊர்க்காரர்களும் கூட விரும்பவில்லை என்றார் பழனிச்சாமி.
பழனிச்சாமியின் இந்த முடிவால் கர்நாடக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. வேறு யாரைத் தூதராக அனுப்பலாம்என்று தீவிரமாக யோசித்து வருகிறது.
நாகப்பா மனைவி கோரிக்கை:
இதற்கிடையே வீரப்பனுடன் பேச கொளத்தூர் மணியைத் தான் அனுப்ப வேண்டும் என நாகப்பாவின் மனைவி பரிமளா கோரிக்கைவிடுத்தார்.
இன்று தமிழக பத்திரிக்கையாளர்களை பிரத்யோகமாக சந்தித்துப் பேசிய பரிமளா, தமிழக அரசும் இந்த விஷயத்தில் உதவ வேண்டும்.கர்நாடக அதிரடிப்படை தனது தேடுதல் வேட்டையை நிறுத்தியது மாதிரி தமிழக அரசும் தனது அதிரடிப்படையின தேடுதல் வேட்டையைநிறுத்த வேண்டும்.
வீரப்பனிடம் வேறு யாரையும் தூது அனுப்புவதை விட கொளத்தூர் மணியை அனுப்புவது தான் நல்லது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications