போலி பிளஸ் டூ சான்றிதழ் மூலம் பி.இ. படித்த மாணவர் கைது
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த ஒரு மாணவர் போலி பிளஸ் டூ சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங்கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக அவரும், போலி சான்றிதழை விற்றவரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ராஜேஷ், கடந்த 1999ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில்தோல்வி அடைந்தார்.
இருப்பினும் என்ஜினியரிங் கல்லூரியில் சேர வேண்டும் என்று விரும்பிய ராஜேஷை வாசுதேவன் என்பவர்அணுகினார். கணிதப் பாடத்தில் பாஸ் செய்தது போன்ற சான்றிதழை நான் தயாரித்துத் தருகிறேன் என்றுஅவரிடம் வாசுதேவன் கூறினார்.
மேலும் இதற்காக ராஜேஷிடமிருந்து ரூ.25,000 வரை பெற்றுக் கொண்ட வாசுதேவன், கணிதப் பாடத்தில் ராஜேஷ்அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தது போல "பக்கா"வாக ஒரு பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலைத் தயார்செய்து கொடுத்தார்.
ராஜேஷும் இந்தப் போலி மதிப்பெண் பட்டியலை சமர்ப்பித்து, ஆவடி அருகே உள்ள தனியார் என்ஜினியரிங்கல்லூரியில் சேர்ந்து விட்டார்.
இந்நிலையில் இவரது பிளஸ் டூ சான்றிதழை ஆய்வுக்காக பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு கல்லூரி நிர்வாகம்அனுப்பியிருந்தது. அங்கு அந்த சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஷை சென்னைகுற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும் போலி சான்றிதழை அவருக்குக் கொடுத்த வாசுதேவனையும்போலீசார் கைது செய்தனர்.
பிளஸ் டூ சான்றிதழ் போலவே "பக்கா" போலி சான்றிதழைத் தயாரித்த பவளவண்ணன் என்பவரைப் போலீசார்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வாசுதேவனும் பவளவண்ணனும் இது போல் நூற்றுக்கணக்கான போலி சான்றிதழைத் தயாரித்து விற்றுள்ளதாகத்தெரிய வந்துள்ளது. அவற்றைக் கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications