"தம்" கேட்டு கோவை சிறையிலும் கைதிகள் போராட்டம்
கோயம்புத்தூர்:
பீடி, சிகரெட் கேட்டு தென்னை மரத்தில் ஏறி உட்கார்ந்து 7 மணி நேரம் போராட்டம் நடத்தினார் கோயம்புத்தூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதி.
பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது போல, சிறைச்சாலைகளிலும் பீடி, சிகரெட்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இது "தம்" அடிக்கும் கைதிகளுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.
பல சிறைச்சாலைகளில் தங்களை பீடி, சிகரெட் புகைக்க அனுமதிக்குமாறு கோரி கைதிகள் நூதனப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரை சிறையில் சமீபத்தில் மரத்தின் மீதும் காம்பவுண்ட் சுவர் மீதும் ஏறிஉட்கார்ந்து கொண்டு "தம்" கேட்டு கைதிகள் போராடினர்.
அதே பாணியில் கோயம்புத்தூர் சிறையிலும் ஒரு கைதி தென்னை மரத்தில் ஏறி நின்று கொண்டு போராட்டம்நடத்தினார். அதுவும் 7 மணி நேரத்திற்கு.
இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைவாணன் என்ற கைதி குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்.
சிகரெட் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை விலக்கிக் கொள்ளுமாறும் தனக்கு பீடி, சிகரெட் வழங்க வேண்டும்என்றும் கோரி சிறை வளாகத்திற்குள் உள்ள தென்னை மரத்தின் மீது ஏறி நேற்று கலைவாணன் உட்கார்ந்துகொண்டார்.
சிறை அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. பின்னர் ஒரு வழியாக மாலை 6.30மணியளவில்தான் கீழே இறங்கி வந்தார் கலைவாணன்.
இதேபோல 50க்கும் மேற்பட்ட கைதிகள் இது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications