நாங்க எங்களுக்காகவா லஞ்சம் வாங்குறோம்
மதுரை:
லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து மதுரை மாவட்ட வருவாய்த்துரைஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய்த்துறை அலுவலகங்களில் குறிப்பாக தாசில்தார், கலெக்டர் அலுவலகங்களில் லஞ்சப் பேய் தலைவிரித்துஆடுவதை நாம் பலமுறை குறிப்பிட்டு எழுதியுள்ளோம்.
இரு தினங்களுக்கு முன் மதுரை வடக்கு தாசில்தார் பழனியப்பன் நிலப்பட்டா தருவதற்காக ரூ. 50,000 லஞ்சம்வாங்கியபோது கையும், களவுமாக பிடிபட்டார்.
அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் விடிய விடிய ரெய்ட் நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு லஞ்சம் வாங்கஉதவிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
இந்த லஞ்ச தாசில்தாரின் வீட்டில் இரவில் ரெய்ட் நடத்தப்பட்டதற்கு மதுரை மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாங்கள் லஞ்சம் வாங்குவதே அடிக்கடி இங்கு வரும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை கவனிக்கவும்உபசரிக்கவம் தான். அதற்காக எங்களுக்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. இந்த உபசரிப்பு வேலை எங்களிடம்தரப்படாவிட்டால் எங்களுக்கு லஞ்சமே தேவையில்லை.
இனி மதுரைக்கு வரும் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நாங்கள் கவனிக்க மாட்டோம். அவர்களதுவருகையைப் புறக்கணிப்போம் என்று இந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அடடா, லஞ்சத்துக்கு இவ்வளவு வேலை இருக்கா!
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications