காவிரி விவகாரம்: முரசொலி மாறன் பதவி விலகத் தயாரா? - அதிமுக கேள்வி
தஞ்சாவூர்:
காவிரிப் பிரச்சினையில் பிரதமரின் பாரபட்சப் போக்கைக் கண்டித்து தங்களது மத்திய அமைச்சர் பதவிகளைராஜினாமா செய்ய திமுக, மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தயாரா என்று அதிமுக கொள்கை பரப்புச்செயலாளரான ஓ.எஸ். மணியன் கேட்டுள்ளார்.
மன்னார்குடியில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் மணியன் சிறப்புபேச்சாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது முரசொலி மாறன் மற்றும் மதிமுக அமைச்சர்களை அவர்கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு சாதகமாக பிரதமர் நடந்து கொண்டுள்ளார். இதை பா.ஜ.கவினர்கண்டிக்கவில்லை. அவர்களுடைய கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும்கண்டிக்கவில்லை. மாநில நலனை விட்டுக் கொடுத்து விட்டனர்.
காவிரிப் பிரச்சினையில் இவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால் பிரதமரின் போக்கைக்கண்டித்து மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாரா? முரசொலி மாறன் பதவி விலகுவாரா, டி.ஆர்.பாலு பதவி விலகுவாரா?
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்காக ஏராளமான திட்டங்களைமேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் ரூ.317 கோடி அளவிலான வட்டி மற்றும் அபராத வட்டியைஆகியவற்றை ரத்து செய்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது எங்கள் அரசு.
அதேபோல, ரூ.164 கோடியில் வறட்சி நிவாரணப் பணிகளை துவக்கி நடத்தி வருகிறது இந்த அரசு என்றார்மணியன்.
-->
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications