கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை:
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை மதிக்க மறுக்கும் கர்நாடக அரசைடிஸ்மிஸ் செய்ய பிரதமர் வாஜ்பாயை வலியுறுத்த வேண்டும் என்று இன்று கூடிய தமிழக அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரிப் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் இன்று மாலை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் திமுக தவிர அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்ஜி.கே. மணி, காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன் மற்றும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.வரதராஜன், பா.ஜ.க. தலைவர் ஆர். கிருபாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர்கழகத்தின் தலைவர் கி. வீரமணி, ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை சார்பில் ரங்கநாதன் ஆகியோர்இக் கூட்டத்தில் பங்கேற்ளனர்.
மாலை 4.30 மணிக்கு சென்னை சட்டசபை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில்ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காமல்தமிழகத்திற்கு நீர் திறப்பதை நிறுத்தி வைத்துள்ள கிருஷ்ணா தலைமையிலான கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யவாஜ்பாயை வற்புறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன.
மேலும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துதமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதற்குத் தகுந்தவாறு காவிரிஆணைய சட்டத் திருத்தத்தில் மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மொத்தம் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து நாளை அனைத்து கட்சித் தலைவர்களையும், அனைத்துக் கட்சி தமிழக எம்.பிக்களையும்அழைத்துக் கொண்டு ஜெயலலிதா டெல்லி செல்கிறார். இந்தக் குழு பிரதமரைச் சந்தித்து தமிழகத்துக்கு தண்ணீர்விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்க உள்ளது.
மேலும் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கர்நாடகஅரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் குழுவினர் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
டெல்லியில் கர்நாடக அனைத்து கட்சி கூட்டம்:
இதற்கிடையே டெல்லியில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறது கர்நாடக அரசு. இதற்காக முதல்வர்கிருஷ்ணா இன்று டெல்லி செல்கிறார்.
நாளை இக் கூட்டம் முடிந்தவுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்க முடிவுசெய்துள்ளார் கிருஷ்ணா.
வாஜ்பாயை கிருஷ்ணா சந்திக்கும் அதே தினத்தில் தானும் வாஜ்பாயைச் சந்திக்க உள்ளார் ஜெயலலிதா.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications