பாமக கலந்து கொள்கிறது: திருமாவளவன் ஆதரவு
சென்னை:
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி ஆணைய கூட்டத்தில் விடுக்கப்பட்ட உத்தரவின்படி காவிரியில் கர்நாடகம்தண்ணீர் திறந்து விடவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை அது அவமதித்துள்ளது. இதற்கான ஆதாரம் உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் வரவேற்கத்தக்கது. இதில் பாமக கலந்துகொண்டு தனது கருத்துக்களை வலியுறுத்தும்.
கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும்அப்போது பாமக வலியுறுத்தும் என்று ராமதாஸ் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் பேசுகையில், காவிரிப் பிரச்சனை மற்றும் தமிழகத்தில் நிலவும் வறட்சிஆகியவற்றைக் குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் ஆதரவு:
இதற்கிடையே ஜெயலலிதா கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புதலைவரான திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சரியான பாதையில்சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.
இந்நிலையில் தமிழக மதச்சார்பற்ற ஜனதா தளமும் காவிரிப் பிரச்சனை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைவரவேற்றுப் பேசியுள்ளார்.
காவிரிப் பிரச்சனையில் அக்கட்சியின் தலைவரான தேவ கெளடா நடந்து கொள்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் தான் தமிழகத்தில் அக்கட்சியைக் கலைத்து விட்டு விலகி வரும் 23ம் தேதி காங்கிரசில் இணையப்போவதாக வடிவேலு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications