டான்சி வழக்கில் திடீர் திருப்பம்: அரசிடம் நிலத்தை ஒப்படைக்க தயார் - ஜெ. பல்டி
டெல்லி:
டான்சி நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தயாராக உள்ளதாக அவருடையவழக்கறிஞரான கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அரசுக்குநஷ்டம் ஏற்படுத்தியதாக அப்போதும் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்குதொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதியான அன்பழகன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டஅனைவருக்கும் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் வழங்கித் தீர்ப்பளித்தார்.
இந்தத் தண்டனை காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் ஜெயலலிதாபோட்டியிடவே முடியாமல் போனது.
இதைத் தொடர்ந்து தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்குதொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வழங்கப்பட்டது. டான்சி வழக்கில்சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தினகர் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டுவென்று, மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயலலிதா.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவர்களுடையமனுக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணையும் தொடர்ந்து நடந்துவருகிறது.
பாரதியின் வழக்கறிஞர் அரிஜினா மற்றும் சுவாமி ஆகியோரின் வாதங்களைத் தொடர்ந்து ஜெயலலிதா சார்பில்அவருடைய வழக்கறிஞரான வேணுகோபால் தனது வாதத்தைத் தொடங்கியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடராம ரெட்டி மற்றும் நீதிபதி ராஜேந்திர பாபு ஆகியோர் முன் நேற்று மீண்டும்விசாரணை நடைபெற்றது. தன் வாதத்தை வேணுகோபால் தொடர்ந்தார். அவர் வாதாடுகையில்,
டான்சி சொத்துக்களை ஜெயலலிதா எப்போதோ தூக்கி எறிந்திருப்பார்.
ஆனால் பிரச்சனைக்குரிய டான்சி நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைப்பதற்கு ஜெயலலிதா எப்போதுமேதயாராகத் தான் இருந்துள்ளார்.
இப்போது அதை அரசிடம் ஒப்படைப்பதற்கோ அல்லது ஏதாவது சேவை நிறுவனங்களுக்குத் தானமாகஅளிக்கவோ ஜெயலலிதா தயாராக உள்ளார்.
ஆனால் இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்த காரணத்தால் தான் டான்சி நிலத்தை திரும்பஅளிக்க முடியாமல் போனது என்று வாதாடினார் வேணுகோபால்.
வேணுகோபாலின் இந்த வாதத்தின் மூலம் டான்சி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கு அடுத்து எந்தக்கோணத்தில் செல்லும் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் தற்போது ஏற்பட்டுள்ளது.
-->
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications