கர்நாடக அரசை கலைக்க கோரும் ஜெ. தீர்மானத்தை நிராகரித்த அனைத்துக் கட்சிகள்
சென்னை:
கர்நாடக அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை மதிக்க மறுக்கும் கர்நாடகஅரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க பிற கட்சிகள்மறுத்துவிட்டன. இதையடுத்து அந்தத் தீர்மானத்தை கடைசி நிமிடத்தில் ஜெயலலிதா கைவிட்டார்.
இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி செல்லும் ஜெயலலிதா நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானநகலை பிரதமரிடம் வழங்குவார்.
தமிழகத்துக்கு மீண்டும் தண்ணீர் திறந்துவிடுமாறு அவர் பிரதமரை வலியுறுத்துவார்.
நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக தவிர அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். வரதராஜன், பா.ஜ.க. தலைவர் ஆர். கிருபாநிதி, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, ப.சிதம்பரத்தின் காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை சார்பில் ரங்கநாதன் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கர்நாடக அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும், காவிரி ஆணைய சட்டத்திருத்தத்தில் மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
டெல்லியில் கர்நாடக கூட்டம்:
இதற்கிடையே டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறது கர்நாடக அரசு. இதற்காக முதல்வர்கிருஷ்ணா நேற்று டெல்லி சென்றார்.
இன்று இக் கூட்டம் முடிந்தவுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்க முடிவுசெய்துள்ளார் கிருஷ்ணா.
-->
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications