சிறப்பு விமானத்தில் டெல்லி சென்றது தமிழக அனைத்துக் கட்சிக் குழு
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி பிரதமரை வலியுறுத்த தமிழக அனைத்துக் கட்சிக் குழு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச்சென்றது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 47 பேர் கொண்ட இந்தக் குழுவினர் சிறப்பு விமானத்தில் டெல்லி சென்றனர். நேற்று நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக இந்தக் குழுவில் இடம் பெறவில்லை.
ஆனால், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று டெல்லி செல்லும் குழுவில் இடம் பெற மறுத்துவிட்டது.
இந்தக் குழுவில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் ஆகியகட்சிகள் இடம் பெற்றுள்ளன.
முதல்வர் தலைமையில் செல்லும் இந்தக் குழுவில் நிதியமைச்சர் பொன்னையன், பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும்இடம்பெற்றுள்ளனர்.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தமிழகத்தை கர்நாடகம் தொடர்ந்துஏமாற்றி வருகிறது. இதில் பிரதமர் வாஜ்பாய் தலையிட வேண்டும். கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்தால் தமிழகமே ஸ்தம்பிக்கும்அளவுக்கு மிகப் பெரிய பந்த் நடத்துவோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கூறுகையில், காவிரி ஆணையத்தை மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தின்உத்தரவையும் சேர்த்து கர்நாடகம் மீறி இருக்கிறது. அந்த மாநிலத்துக்குக் கடிவாளம் போடாவிட்டால் பெரும் பிரச்சனை வெடிக்கும்என்றார்.
இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் வாஜ்பாயை இந்தக் குழு சந்திக்கிறது.
அப்போது கர்நாடக அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும்என தமிழக அனைத்துக் கட்சிக் குழு வலியுறுத்த உள்ளது.
-->
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications