கபினியை மீண்டும் தமிழகத்திடம் தர வேண்டும்
தஞ்சாவூர்:
தண்ணீர் தராமல் அழிச்சாட்டியம் செய்யும் கர்நாடக அரசுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் கபினி மற்றும்சாரங்கி அணைகளை கைப்பற்றச் செல்வோம் என என்று திருச்சி மற்றும் தஞ்சை பகுதி விவசாயிகளின் சங்கங்கள்அறிவித்துள்ளன.
இந்த விஷயத்தில் கர்நாடகத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்து வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராகவும்விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திலிருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளான கபினி அணை மற்றும் சாரங்கி அணை ஆகியவை அமைந்துள்ளஇடங்களை மீண்டும் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும். நியாயமும்கிடைக்கும்.
நடுவர் மன்ற கட்டளையை மீறி அதிக பரப்பளவில் கர்நாடகம் பயிர் செய்து வருகிறது. எந்தத் தீர்ப்பையும்அவர்கள் மதிப்பதில்லை. அணைகளை கைப்பற்றுவதுதான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு.
அதேபோல, நெய்வேலியிலிருந்து கர்நாடகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தையும் தமிழகம் நிறுத்த வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
வாஜ்பாய்க்கு எதிராக...
இதற்கிடையே கர்நாடக அரசைக் கண்டித்தும், பிரதமர் வாஜ்பாயின் பாரபட்சப் போக்கைக் கண்டித்தும் திருச்சியில்நடந்த விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தை விவசாயிகள் வெளிநடப்புச் செய்தனர்.
திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவாசகம் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் நடந்தது.இதில் திருச்சி, தஞ்சைப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக பிரதமர் வாஜ்பாய் மீது குற்றம் சாட்டிய அவர்கள் கூட்டத்தைப்புறக்கணித்துவிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கூடி வாஜ்பாய் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாவைக்கண்டித்து கோஷமிட்டனர்.
-->
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்!












Click it and Unblock the Notifications