நீர் தர முடியாது: கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற பிரதமர் வாஜ்பாயின் கோரிக்கையை கர்நாடகம் ஏற்க மறுத்துவிட்டது.

இது தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி நேற்று கர்நாடகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். கபினிஅணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விடுமாறு பிரதமர் வாஜ்பாயின் சார்பில் அவர் கோரியிருந்தார்.

ஆனால், இக் கோரிக்கையை ஏற்க முடியாது என கர்நாடகம் அறிவித்துவிட்டது. டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர்கிருஷ்ணா,

ஒரு மாநிலத்துக்கு பிரச்சனை வந்தால் இன்னொரு மாநிலம் உதவ வேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், எங்கள் நிலையைதமிழகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தண்ணீர் தரும் நிலையில் நாங்கள் இல்லை.

பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் தான் தமிழகத்துக்குத் தண்ணீர் விட ஒப்புக் கொண்டோம். ஆனால், மழை பெய்யவில்லை.எங்கள் விவசாயி நீரில் குதித்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வளவு தூரத்துக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாராவதுசும்மா குதித்து சாவார்களா?. இதனால் தமிழகத்துக்கு நீரைத் தர முடியாது. இதை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிப்போம்.

காவிரிப் பிரச்சனை என்பது விவசாயிகள் பிரச்சனை. இதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவறட்சி இப்போது நிலவுகிறது. கர்நாடகத்தில் 152 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 42 தாலுகாக்கள் காவிரிஆற்றோரத்தில் உள்ளன என்றார்.

தனது மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தை கிருஷ்ணா இன்று காலை டெல்லியில் நடத்தினார், இன்றே தனது மாநிலகட்சித் தலைவர்களுடன் அவர் இன்று இரவு பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கிறார்.

தமிழகத்துக்குத் தண்ணீர் விட முடியாது என்று கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் பிரதமரிடம்தருவார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+