கர்நாடக அணைகளை கையகப்படுத்த தமிழகம் கோரிக்கை
டெல்லி:
கர்நாடகத்தில் உள்ள அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு நீரைத் திறந்து விட வேண்டும் எனபிரதமர் வாஜ்பாயிடம் தமிழக அனைத்துக் கட்சிக் குழு கோரிக்கை விடுக்கவுள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான 47 பேர் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழு சிறப்புவிமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இக் குழு மாலை பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கும் இந்தக் குழு கர்நாடக அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுதமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்று நேற்று சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைபிரதமரிடம் வலியுறுத்தியது.
முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இதே கோரிக்கையை பிரதமரிடம் முன் வைத்தனர்.
நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று டெல்லி செல்லும் குழுவில் இடம் பெறமறுத்துவிட்டது. கர்நாடக அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாததால் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை என அக் கட்சி கூறியுள்ளது. இந்தக் கோரிக்கையே அபத்தமானது என அக் கட்சிகருத்துத் தெரிவித்தது.
திமுகவும் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை. நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் திமுக புறக்கணித்தது நினைவுகூறத்தக்கது.
இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் டெல்லி சென்ர குழுவில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.
நிதியமைச்சர் பொன்னையன், பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், நீர்வளத்துறைசெயலாளர் ஆகியோரும் உடன் சென்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தமிழகத்தைகர்நாடகம் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதில் பிரதமர் வாஜ்பாய் தலையிட வேண்டும். கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்தால்தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப் பெரிய பந்த் நடத்துவோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கூறுகையில், காவிரி ஆணையத்தை மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தின்உத்தரவையும் சேர்த்து கர்நாடகம் மீறி இருக்கிறது. அந்த மாநிலத்துக்குக் கடிவாளம் போடாவிட்டால் பெரும் பிரச்சனை வெடிக்கும்என்றார்.
-->
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications