திமுக, பா.ம.க, காங்கிரஸ் மீது அதிமுக பாய்ச்சல்
சென்னை:
காவிரி தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக, வெளிநடப்பு செய்த காங்கிரஸ், கூட்டத்தில் கலந்து கொண்டபாட்டாளி மக்கள் கட்சி என அனைத்துக் கட்சிகளையும் சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துள்ளார் நிதியமைச்சர் பொன்னையன்.
இன்று அனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி சென்ற பொன்னையன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அவர்கூறியிருப்பதாவது:
மாநிலத்தின் நலனுக்காக நடத்தப்பட்டக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக மக்களுக்குச் செய்ய வேண்டிய தனது கடமையைச் செய்யத்தவறிவிட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வெளிநடப்பு செய்தது. அக் கட்சியின் தலைவர்களானஇளங்கோவனும், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் திட்டமிட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்துக்கு துரோகம் செய்த கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்ற ஒரேகாரணத்திற்காகத் தான் அவர்கள் கூட்டத்துக்கே வந்தனர். மக்கள் பிரச்சனைக்காக வரவில்லை. திட்டமிட்டு அவர்கள் வெளிநடப்புசெய்தனர். அதை மன்னிக்கவே முடியாது.
இவர்கள் இப்படி என்றால் பாட்டாளி மக்கள் கட்சி இரட்டை வேடம் போட்டது. அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்திகர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், கூட்டத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அரசியல் சட்டத்தின் 355வது பிரிவின்படி கர்நாடகத்தைக் கட்டுப்படுத்தினால் போதும் என்று பேசினார்.
இதன் மூலம் ஒவ்வொரு கட்சியும் அரசியல் ஆதாயம் தேடுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிர மக்கள் நலனைப் பற்றி கவலையேபடவில்லை என்பது தெளிவாகிறது.
இவ்வாறு பொன்னையன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-->
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்!












Click it and Unblock the Notifications