ஜெயலலிதாவுக்கு செலக்டிவ் அம்னீசியா: திமுக தகவல்
சென்னை:
ஜெயலலிதாவுக்கு செலக்டிவ் அம்னீசியா வியாதி இருக்கிறது. இதனால் தான் தனக்கு ஒத்து வராத விஷயங்களை மட்டும் அவர்மறந்துவிடுகிறார் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
வறட்சி காலத்தில் காவிரி நீரை பிரச்சனையில்லாமல் பகிர்ந்து கொள்ள இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையே உள்ளபராகா அணை மாதிரி ஒரு அணையை உருவாக்கலாம் என்றும் பாலு யோசனை தெரிவித்தார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய அவர், ஒரு நதியின் நீரை இரு நாடுகளே சண்டையில்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும்என்றால், இரு மாநில அரசுகளும் அதைச் செய்ய முடியும்.
காவிரிப் பிரச்சனையை முதல்வர் ஜெயலலிதா தான் மிகவும் குழப்பிவிட்டார். இதன்மூலம் மக்களை வேறு பிரச்சனைகளில்இருந்து திசை திருப்பி ஏமாற்ற முயற்சி செய்கிறார்.
இந்தப் பிரச்சனை குறித்துப் பேச நடந்த காவிரி நதி ஆணையக் கூட்டத்துக்கு பாசனத்துறையை கவனிக்கும் பொதுப் பணித்துறைஅமைச்சர் பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக அந்தத் துறைக்கு சம்பந்தமே இல்லாத நிதியமைச்சர் பொன்னையனை ஜெயலலிதாஅனுப்பி வைத்தார். இது போன்ற தொடர் குழப்பம் செய்து வருகிறார் ஜெயலலிதா.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நிலை திமுகவுக்கு திருப்தி தரவில்லை, எந்த உத்தரவையும் மதிக்காத அம் மாநிலத்தின்போக்கு வேதனை தருகிறது.
காவிரி ஆணையம் உருவாக்கப்பட்டதில் திமுகவுக்கு பெரும் பங்குண்டு. தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீர் கிடைக்கச் செய்ததுதிமுக தான்.
காவிரிப் படுகையில் உள்ள அணைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதாஇப்போது கோரிக்கை விடுத்துள்ளார். இதே கோரிக்கையை அவர் முன்பும் வைத்தார். ஆனால், அதை எல்லாம்விவாதித்துவிட்டுத் தான் கடைசியில் காவிரி நதி நீர் ஆணையம் உருவாக்கப்பட்டது. அவரது கோரிக்கையை அப்போதேமத்திய அரசு நிராகரித்தது. அப்போது அதை ஜெயலலிதா ஏற்றார்.
இப்போது ஏதோ புதிய யோசனை சொல்வது மாதிரி மீண்டும் தனது பழைய பல்லவியை ஜெயலலிதா பாடுகிறார். தான் முதலில்சொன்னதை ஜெயலலிதா தனதுக்கு வசதியாக மறந்துவிட்டார். அவருக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்கிறது (அத்வானிக்குசெலக்டிவ் அம்னீசியா இருப்பதாக முன்பு ஜெயலலிதா கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது).
காவிரி தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காததற்கு ஜெயலலிதா தான் காரணம். திமுகவை அவர் உரியமுறையில் அழைக்கவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications