கர்நாடக அணைகளில் கண்காணிப்பு குழுவினர் நாளை ஆய்வு
பெங்களூர்:
கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து காவிரி கண்காணிப்புக் குழுவினர் நாளை ஆய்வுநடத்தவுள்ளனர்.
கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தான் காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கடந்த சனிக்கிழமை பிரதமர் வாஜ்பாயிடம் அம்மாநில முதல்வர் கிருஷ்ணாதெரிவித்தார்.
இதையடுத்து கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து மூன்று நாட்களுக்குள் அறிக்கைஅளிக்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
அதன்படி மத்திய நீர்வளத்துறை செயலாளரான கோஸ்வாமி தலைமையிலான மூன்று பேர் கொண்ட காவிரிகண்காணிப்புக் குழு இன்று மாலை பெங்களூர் வந்து சேர்கிறது.
நாளை காலை தமிழக, கர்நாடக தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் காவிரி கண்காணிப்புக்குழுவினர் விவாதிக்க உள்ளனர்.
பின்னர் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய அணைகளைஹெலிகாப்டர் மூலம் சென்று காவிரி கண்காணிப்புக் குழுவினர் நாளை பார்வையிடவுள்ளனர்.
இவர்களுடன் தமிழக மற்றும் கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர்களும் சென்று நீர் இருப்பு குறித்து ஆய்வுநடத்தவுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் தமிழக அணைகளையும் பார்வையிட்ட பின்னர் பிரதமரிடம் அறிக்கை அளிக்கவுள்ளனர்.
கடந்த 3ம் தேதி அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் 8ம் தேதி வழங்கப்பட்ட காவிரி நதி நீர்ஆணையத்தின் உத்தரவு ஆகியவற்றுக்குப் பின்னர் கர்நாடக அரசு மேட்டூர் அணைக்குத் திறந்து விட்டுள்ள நீரின்அளவு குறித்து மத்திய அரசு வரும் 27ம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காவிரி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக சட்டசபை நாளை அவசரமாகக் கூடுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications