பழிக்குப் பழி: மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை
மதுரை:
மதுரையில் மாமூலைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டான்.
மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்தவன் மலைச்சாமி. இவன் அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் செய்து வந்தான்.
மாமூல் தொகை வசூலானதும் அந்தப் பணத்தை மலைச்சாமியும் அவனுடைய கூட்டாளிகளும் பங்கு போட்டுக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் பணத்தைப் பங்கு போடுவதில் மலைச்சாமிக்கும் அவனுடைய கூட்டாளிகளுக்கும் இடையே பயங்கரத் தகராறு ஏற்பட்டது.
அப்போது பழனிச்சாமி என்ற ரவுடியை மலைச்சாமி கத்தியால் குத்திக் கொன்றான்.
இதையடுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் மலைச்சாமியைக் கொல்லத் திட்டமிட்டனர்.
நேற்று மலைச்சாமி தெப்பக்குளம் பகுதியில் தனியே சென்றபோது அவனை பழனிச்சாமியின் தந்தை, தாய் உள்பட 6 பேர் வழி மறித்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பியோடிய மலைச்சாமியை அவர்கள் விரட்டிச் சென்றனர். பின்னர் நடுரோட்டில் வைத்து அவனை மடக்கி சரமாறியாக வெட்டினர். இதில் மலைச்சாமி அந்த இடத்திலேய உயிரிழந்தான். பழனிச்சாமியின் தாயும் சேர்ந்து அவனை வெட்டியதாகத் தெரிகிறது. பின்னர் அந்தப் பெண்ணும் மற்ற 5 பேரும் தப்பியோடிவிட்டனர்.
நடுரோட்டில் பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலை தெப்பகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிவிட்ட பழனிச்சாமியின் தாய், தந்தை உள்ளிட்ட ஆறு பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் மாமூல் வசூலித்து வாழ்க்கை நடத்துவதில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இவர்களுக்கு வேலையே அடுத்தவர்களிடம் பணம் பறிப்பது, கொள்ளை அடிப்பது தான்.
இதை இவர்கள் ஒரு நிரந்தரத் தொழிலாளகவே செய்து வருகின்றனர். இந்த மாமூல் பணத்தை வட்டிக்கு விட்டு பெரும் செல்வந்தரான ரெளடிகளும் உண்டு. இந்த வட்டித் தொழிலை ரவுடிகளின் வீட்டுப் பெண்கள் நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications