ராக்கெட் லாஞ்ச்சர் பறிமுதல்: "போட்டு" கொடுத்து மாட்டிய காங்கிரஸ் பிரமுகர்
ராமேஸ்வரம்:
விமானங்கள், ஹெலிகாப்டர்களைத் தாக்கி அழிக்கும் ராக்கெட் லாஞ்சர் ராமேஸ்வரத்தில் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
இதில் பயன்படுத்தப்படும் சிறிய ராக்கெட்டுகள் தவிர ஏ.கே.47 துப்பாக்கி, அதன் தோட்டாக்களும் சிக்கியுள்ளன.
இந்த ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக திராவிடர் கழக தலைவர் சிகாமணி உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
SAM (shoulder aided missle) எனப்படும் இந்த ராக்கெட் லாஞ்சர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. 4.5 அடி நீளம் கொண்டது.
முன்னதாக சிகாமணியின் ஹார்டுவேர் கடையில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது இந்த ராக்கெட் லாஞ்சர், ஏ.கே.47 துப்பாக்கி, அதில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், பிரவுன் சுகர், கஞ்சா ஆகியவை சிக்கின. ஆனால், ராக்கெட் லாஞ்சர் அதற்குள் லாரியில் ஏற்றப்பட்டிருந்தது. அதை லாரி புக்கிங் அலுவலகத்தில் வைத்து போலீசார் கைப்பற்றினர்.
இவை இலங்கையில் இருந்து 2 படகுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈரோட்டுக்குக் கொண்டு செல்வதற்காக இந்த ராக்கெட் லாஞ்சர் பார்சல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சிகாமணியையும் இந்த ஆயுதங்களை லாரியில் ஏற்றிக் கடத்த உதவிய டிரை சைக்கிள் கடையின் உரிமையாளர், லோடு மேன்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பார்சல்கள் ஈரோட்டுக்கு அனுப்பட இருந்ததால் இவை வீரப்பன் கும்பலுக்குக் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகிக்கிப்படுகிறது.
வீரப்பனைத் தேடும் பணியில் தற்போது ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் லாஞ்சர் மூலம் ஹெலிகாப்டர்களைத் தாக்கி அழிப்பதற்காக இது வீரப்பனுக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகத் தெரிகிறது.
கைப்பற்றப்பட்ட லாஞ்சர் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது. குறிப்பாக ஹெலிகாப்டர்களை விரட்டிச் சென்று அழிக்கக் கூடியது இந்த ராக்கெட் லாஞ்சர்.
இந்த ராக்கெட் லாஞ்சரும் கைப்பறறப்பட்ட பிற ஆயுதங்களும் இன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த ராக்கெட் லாஞ்சர் பறிமுதல் செய்யப்பட்டது ராணுத்தினரையும் தமிழக போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு மாநில அரசிடம் முழு விவரம் கேட்டுள்ளது. மேலும் மத்திய புலனாய்வுப் பிரிவின் ஒரு குழுவும் ராணுவ உளவுப் பிரிவினரும் ராமேஸ்வரம் வந்து சேர்ந்துவிட்டனர்.
இச் சம்பவத்தையடுத்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கடற்படைக்கும், கடலோர பாதுகாப்புப் படைக்கும் மாநில போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றிரவு விடிய விடிய சோதனை நடத்தினர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.
இதைக் கடத்தி வந்தவர்கள் ராமேஸ்வரத்தில் தான் தங்கி இருந்ததாகவும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விவரம் தெரிய வந்தவுடன் அவர்கள் தப்பிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-->
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications