மாணவர் போராட்டம் ஓயவில்லை: அரசின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம்தொடர்ந்து நடந்து வருகிறது.

மதுரை மீனாட்சிக் கல்லூரி மாணவிகள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா நடத்தினர். எங்களுக்குக் கல்விப்பிச்சை வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

மாணவிகள் மத்தியில் பேசிய மாணவி அமுதா கூறுகையில், சில நாட்கள் கல்லூரியை மூடிவிட்டால் மாணவ, மாணவிகளின்மனநிலை மாறிவிடும் என்று அரசு நினைத்தது. ஆனால், எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. கல்லூரிகளை அரசேதொடர்ந்து நடத்த வேண்டும். பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைத்தால் ஏற்படும் கட்டண உயர்வை எங்கள் குடும்பத்தால்சமாளிக்க முடியாது. நாங்கள் அரசிடம் கேட்பது கல்விப் பிச்சை தான். அதைத் தராத வரை போராட்டம் தொடரும் என்றார்.

அதே போல தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியின் மாணவிகள் 1,000 பேர் இன்று அரசுக்கு எதிராக கண்டன ஊர்வலம்நடத்தினர். மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடத்தினர். தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியைச் சேர்ந்த 500 மாணவர்களும்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலூர் அரசுக் கல்லூரி மாணவர்களும் இன்று கல்லூரிக்குள் போராட்டம் நடத்தினர். இந்த மாணவர்கள் சாலை மறியலில்ஈடுபட்டபோது போலீசார் வன்முறைத் தாக்குதல் நடத்தியதில் பல மாணவ, மாணவியர் காயமடைந்தனர். இதனால் இன்றுகல்லூரிக்குள்ளேயே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏதும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக எஸ்.பி.தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் கல்லூரிக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்தனர்.

புதுக்கோட்டையில் மாணவர்கள் கல்விப் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர். கைகளில் புத்தகங்களை ஏந்தி அவர்கள்கல்விப் பிச்சை வேண்டும் என்று கோரியவண்ணம் ஊர்வலம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்ய அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. முதலில் மிரட்டிப்பார்த்த அரசு பின்னர் விடுதிகளை மூடியது. தொடர்ந்து கல்லூரிகளையும் மூடிப் பார்த்தது. ஆனாலும் மூடப்பட்ட கல்லூரிவாயில்களில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியதால் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இப்போதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையே அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல்கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+