கோவில்பட்டி தீ விபத்தில் 5 பெண்கள் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
கோவில்பட்டி அருகே நடந்த பயங்கர தீவிபத்தில் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய 5பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை உள்ளது.
இங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சுமார் 1 மணியளவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்துநிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 80க்கும் மேற்பட்ட பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இருப்பினும் கொளுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
காயமடைந்த பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் வழியிலேயேஇறந்தனர்.
காயமடைந்த மற்ற பெண்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications